முக்கியத்துவம்:
மத்திய கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை, கடந்த 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வை நடத்தி வருகிறது. ஜே.இ.இ.,யில் மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு கட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன. ஜே.இ.இ.,- மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே ஜே.இ.இ., -அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியும்.
படிப்புகள்:
பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளானிங்
கல்வி நிறுவனங்கள்:
என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநில அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் ஜே.இ.இ., -மெயின் அடிப்படையிலும், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் ஜே.இ.இ., - அட்வான்ஸ்டு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதிகள்:
12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுடன், வேதியியல் / உயிரியல் / உயிரி தொழில்நுட்பம் / தொழில்நுட்ப தொழிற்கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் படித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
தேர்வு முறை:
ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் ஜே.இ.இ.,-மெயின் தேர்வில், மாணவர் பெறும் அதிக மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற ஆண்டிலிருந்து, மூன்று ஆண்டுகள் வரை இத்தேர்வு எழுதலாம். ஜே.இ.இ., மெயின் தேர்வில் மொத்தம் இரண்டு தாள்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் கேள்விகள் இடம்பெறுகின்றன.
B.E., B.TECH PAPER 1:
கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களிலிருந்து மொத்தம் 75 கேள்விகள் கேட்கப்படும்.
பி.ஆர்க்., / பி.பிளான்., - தாள் 2:
பி.ஆர்க்., படிப்பிற்கான தாள் 2'ஏ' தேர்வில் 77 கேள்விகளும், பி.பிளானிங் படிப்பிற்கான தாள் 2'பி' தேர்வில் 100 கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 22
தேர்வு நாட்கள்:
2025 ஜனவரி 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை
விபரங்களுக்கு:
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE