ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும்.நினைத்த காரியம் நிறைவேறும். ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணுகின்றனர்.
அதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27 -ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. குறிப்பாக ஏழுமலையானுக்கு உகந்த 3-ம் சனிக்கிழமை அன்று இந்த ஆண்டு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்து மக்களுக்கு காட்சி தர உள்ளது மிகவும் சிறப்பு ஆகும்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி ,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இன்று புரட்டாசி மாதம் பிறந்ததால் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் திருமலை முழுவதும் பக்தர்கள் குவிந்து இருந்தனர். இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பினர். இலவச தரிசனத்திற்காக நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் 30 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டு உள்ளனர்.
நோன்பு
பொதுவாக பெருமாளை வழிபடுபவர்கள் சனிக்கிழமைகளில் அசைவம் உண்ண மாட்டார்கள். அதே புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் நோன்புடன் பெருமாளை வழிபடுவார்கள். அதேபோல சனிபகவானையும் பக்தர்கள் வழிபடுவார்கள். ஏனெனில் இந்த மாத்தில்தான் சனிபகவானிடமிருக்கும் தீய எண்ணங்கள் அதன் பலத்தை இழக்கிறது எனவும், இதனால் சனி பகவானை வழிப்பட்டால் நன்மை நடக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
ஐதீகம்
ஐதீகம்
அதேபோல பெருமாளை வேண்டிக்கொண்டு மாவிளக்கும் வீட்டில் ஏற்றுவார்கள். அதாவது திருமலையில் இருக்கும் பெருமாள், தன்னுடைய பக்தர்கள் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவ்வாறு அவரை காண செல்ல முடியாத பக்தர்கள் அவரை நினைத்து வீட்டில் மாவிளக்கு ஏற்றுவார்கள். விளக்கை ஏற்றி 'கோவிந்தா' என உச்சரிப்பதன் மூலம் பெருமாளின் ஆசியை நேரடியாக பெற முடியும் என்பது ஐதீகம். எனவே புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இதனால்தான் மாவிளக்கு ஏற்றப்படுகிறது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE