Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைச்சர் முக்கிய அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

சட்டப்பேரவையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்கியதாவது:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறி வருகின்றன. ஆனால் நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை இதில் சிக்கல் இருக்கிறது.

2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.24,000 கோடி வரை, தனி நபரைப் பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு ரூ.2 லட்சம் வரை அரசின் சொந்த நிதியை செலவிட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது முழுவதும் தனிநபர் பங்களிப்பில் இருந்து வரும் நிலையில், அதில் அரசின் பங்களிப்பாக ஆண்டொன்றுக்கு ரூ.3,205 கோடி, தனி நபரை பொறுத்தவரை ரூ.50,000 என்று செலவிடப்படுகிறது.

தனி நபர் கணக்கில் இருந்து அரசுக் கணக்குக்கு ஓய்வூதியத் தொகை செலவை மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் நிலவுகிறது. இதுவரை அரசின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியாகவும், முன்னாள் நீதிபதிகள், எம்.எல்.சி.க்கள், எம்எல்ஏக்கள் அவர்களின் குடும்ப ஓய்வூதியம் உட்பட அனைத்து வகையான ஓய்வூதியத்துக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு சுமாராக ரூ.39,000 கோடி நிதி செலவிடப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்தை மாற்றுவது குறித்து முதலமைச்சரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக திமுக வழங்கியிருந்த நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின், அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு பேசி இருப்பது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES