புதிய கல்வி கொள்கையின்படி, நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தொழில் சார்ந்த தனித் திறன்களை வளர்க்கவும், தொழில் முனைவோராக மாற்றவும், தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலையின் சார்பில், ஏற்கனவே இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த வகையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகள் என, 19 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும், 1,500 மாணவியருக்கு, தொழில் சார்ந்த தனித் திறன்களை வளர்க்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதற்காக, அண்ணா பல்கலையுடன், இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.சி.சி.ஐ.,யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சென்னை தலைவர் பிரசன்ன வாசனாடுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தப்படி, 'கேம்பஸ் முதல் கார்ப்பரேட் வரை' என்ற நோக்கில், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியருக்கு, திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஐந்து வாரங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE