அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்
6 - 12 அரசு பள்ளியில் படித்தவர்கள் பயன்பெறலாம்
ஐஐடி, எம்ஐடி, எய்ம்ஸ் இளங்களை படிப்பு செலவை அரசே ஏற்கும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக சட்டமன்றத்தில் 2022 - 2023-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பட்ஜெட் தாக்கல்; திமுக புழு அரசாங்கம்; நெத்தியடி கொடுத்த இ பி எஸ்!
இதில்,கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு வரும் நிதியாண்டிற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் வகையில் கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகளை அரசு உருவாக்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் இதுபோன்ற முன்மாதிரி பள்ளிகளை உருவாக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளையும் நவீன மயமாக்கும் திட்டத்திற்காக 'பேராசிரியர் க.அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் மாவட்ட மத்திய நூலகங்கள் ஏற்படுத்தப்படும்.
சென்னை புத்தகக் கண்காட்சி போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். மேலும், மரபுகளை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள், புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கிய திருவிழாக்களுக்கு ரூ.5.6 கோடி ஒதுக்கீடு.
ஐஐடி, எய்ம்ஸ், என்ஐடி போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலை படிப்புக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி.காமகோட்டி, தமிழக அரசின் திட்டம் ஏழை மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் இருப்பதாகவும், அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளை ஐஐடி நிர்வாகம் செய்யும் எனவும் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது மகிழ்ச்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
எப்படியேனும் கல்வி கற்று விடுங்கள் என்று சொல்கிற ஓர் அரசு.திராவிட மாடல் அரசு.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE