நாகர்கோவில்: நாகர்கோவிலில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுரை கூறினர். தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி நேரங்களை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு நகரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பஸ் படிக்கட்டில் தொங்கி ெகாண்டு பயணிக்கிறார்கள். இது தொடர்பாக நேற்று தமிழ்முரசு மாலை நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று காலை நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், மீனாட்சிபுரம் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நின்று ஆய்வு செய்தனர். பஸ்களில் தொங்கி கொண்டு வந்தவர்களுக்கு அறிவுரை கூறி உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர்.
கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் மாணவர்கள் பஸ்களில் தொங்கிக் ெகாண்டு வருவது கண்டறியப்பட்டு, வழித்தடங்களை கணக்கில் ெகாண்டு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். நாகர்கோவிலை பொறுத்தவரை பூதப்பாண்டி, அருமநல்லூர், தடிக்காரன்கோணம், கடுக்கரை, காட்டுப்புதூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் பேருந்துகளில் மாணவர்கள் அதிகளவில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு உள்ளனர். எனவே இதை கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்ெகாண்டு வருகிறார்கள்.
பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய நிறுத்தங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நின்று அறிவுரை வழங்கினாலும் மாணவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. எனவே காவல்துறையினர் மூலம் எச்சரித்தால் தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே காலை வேளைகளில் பஸ் நிலையங்களிலும், முக்கிய பஸ் நிறுத்தங்களிலும் அந்தந்த பகுதி போலீசார் நின்று கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE