PLAY VIDEO
தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கத்தியுடன் மாணவர் வந்ததால் பரபரப்பு
ஏறினா ரயில் இறங்கினா ஜெயிலு போட்டா பெயிலு கத்தியை காட்டி மிரட்டல
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேவதானப்பட்டி, சாத்தா கோவில்பட்டி, மஞ்சளாறு, புல்லாக்காபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால், பெற்றோரை அழைத்து வருமாறு ஆசிரியர் கூறினார். இது அந்த மாணவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மறுநாள் மாணவர் பள்ளிக்கு பெற்றோரை அழைத்து வரவில்லை. அதற்கு பதிலாக மாணவர், கத்தியுடன் வந்தார். பெற்றோரை அழைத்து வரச்சொல்லிய ஆசிரியரை கத்தியை காட்டி மிரட்டினார்.
அச்சத்தில் ஆசிரியர்கள்
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பெரியகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதற்கிடையே அந்த மாணவர், 17-ந்தேதி, கத்தியுடன் மீண்டும் பள்ளிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆசிரியர்கள் அச்சம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைரலாகும் வீடியோ
இந்தநிலையில் கத்தியுடன் வந்த மாணவர், ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எங்க அம்மாவோட அக்கா மகன், வீடியோ எடுத்து என்ன செய்ய முடியும்.
கழுத்த அறுக்க முடியுமா?, குத்த முடியுமா?. போலீஸ்காரரை குத்த திறமை இருக்கு. ஏறினா ெரயிலு, இறங்கினா ஜெயிலு, போட்டா பெயில். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.
இதேபோல் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது. இதனால் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்
இதற்கிடையே பள்ளிகளில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில், மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE