https://www.dinamalar.com/
'மாநில அளவில் புதிய கல்வி கொள்கையை உருவாக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லுாரிகளில் கற்றல், கற்பித்தல், தேர்வு நடத்துதல், வேலை வாய்ப்பு பயிற்சி அளித்தல் என, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான மாநிலங்களில் புதிய கல்வி கொள்கை அமலாகியுள்ளது. தமிழகத்தில், அதன் முக்கிய அம்சங்கள் படிப்படியாக அமலாகின்றன.
இந்நிலையில், மாநில அளவில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள மாணவர்களுக்கு, இங்கேயே அவர்களின் படிப்பை தொடர்வதற்கான முயற்சிகளை, தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான அண்ணா பல்கலையின் பாட திட்டம், 25 ஆண்டுகளாக முழுமையாக மாற்றப்படவில்லை. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், பாட திட்டத்தை மாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழு சார்பில், விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பாட திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் துவங்கும். தேசிய அளவில் கல்வி கொள்கை வகுத்துள்ளது போல, மாநில அளவிலும் கல்வி கொள்கையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்கும்.இவ்வாறு பொன்முடி கூறினார்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE