இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது :
அரசு, தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் . பேருந்தில் கூட்டமாக மாணவர்கள் செல்வதைத் தவிர்க்க பள்ளி முடிந்த பின் 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்து அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் பைக் ஓட்டுவதை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
18 வயதுக்கு மேற்பட்ட லைசென்ஸ் லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் ஒருசில மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர் வாகனங்களில் வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர பள்ளிகள் அனுமதிக்கக் கூடாது. 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது” என தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE