சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது
சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019ம் ஆண்டுல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதன் மூலம் பலகோடி மக்கள் பாதிப்படைந்தும், பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. ஒருபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சாங்சுன் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் உருவாகி, உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் மரபணு மாற்றம் பெற்று புதுப்புது வடிவில் கடும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளில் 45 கோடிக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். சுமார் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் உயிரிழந்தனர்.
கடைசியாக வந்த ஒமிக்ரானுக்கு பிறகு உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு சற்று குறைந்தது. இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து, சீனாவின் வடகிழக்கில் உள்ள சாங்சுன் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிலின் மாகாணத்தின் தலைநகரான சாங்சுன், முக்கிய தொழில் நகரமாகும். இங்கு 90 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இங்கு வசிப்பவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நகரில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக 2 நாட்களுக்கு ஒருமுறை, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக சீனா முழுவதும் கரோனா பாதிப்பு இந்த வாரம் ஆயிரத்தை தாண்டியுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு, தினசரி பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்த நிலையில் நேற்று புதிதாக 1,369 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஷாங்காய் மற்றும் பிற முக்கிய நகரங்களில் தொற்று பரவலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. ஷாங்காய் நகரில் பள்ளிகளை மூடவும், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறவும் நேற்று உத்தரவிடப்பட்டது.
கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு, ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பரவலை சீன அரசு கட்டுக்குள் கொண்டுவந்தது. நீண்டகால ஊரடங்கு பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்று சீனாவின் மத்திய பொருளாதார திட்டமிடல் நிறுவனம் எச்சரித்தது. மற்ற நாடுகளைப் போல சீனர்களும் இந்த வைரஸுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் சீனாவின் உயர் விஞ்ஞானி ஒருவர் கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE