ஆனால் இந்த நாளில் குறிப்பிட்ட கடவுளை நினைத்து விரதம் அனுஷ்டிக்கும் போது பல்வேறு நற்பலன்களைப் பெற முடியும்.
அந்த வகையில் பெருமாள், சனி பகவான், அனுமனுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம்,.
பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் விஷேசமானது.
இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம் கஷ்டங்கள் படிப்படியாகக் குறைவதைக் காணலாம்.
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் பிறவிப்பயனை அடையலாம்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்றும், சனி தசை மற்றும் சனி புக்தி காலத்திலும் விரதம் இருந்து, சனி பகவானுக்கு கருங்குவளை மலரால் அர்ச்சனை செய்து, எள் சாதத்தை நெய்வேத்தியம் செய்து, சனி காயத்ரி மந்திரத்தை 26 முறை ஜெபிப்பதோடு, காகத்திற்குச் சனிக்கிழமைகளில் சாதம் வைத்து வந்தால் சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஏழைகளுக்கு தானம் செய்தால் சனிபகவானால் ஏற்படும் தொந்தரவுகள் படிப்படியாகக் குறையும்.
அனுமனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பான பலனைத்தரும்.
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி மனமுருக வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் பனிபோல் விலகி விடும்..
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE