https://www.dinamalar.com/
இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான, 'நான் முதல்வன்' திட்டத்தை, திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக, மார்ச் 1ல் முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதன் நீட்சியாக, இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், நேர்முகத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தவும், திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே,புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லீஸ் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன், தொழிலாளர் நலத் துறை செயலர் கிர்லோஷ்குமார், இயக்குனர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டனர்.உலகெங்கும் இளைஞர்கள் தடையின்றி செல்ல, ஆங்கில மொழியை கற்றறியவும், கல்வி மற்றும் கலாசாரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு பயிற்சி, தரமான கல்வி மற்றும் சர்வதேச தரத்திலான மதிப்பீடுகளை, இளைய சமுதாயத்திற்கு அளிக்க வழிவகுக்கும். இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, பிரத்யேக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE