சென்னையில் 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது.
ரூபாய் 917 விற்பனை செய்யப்பட்ட நிலையில் 50 ரூபாய் உயர்ந்து 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 16 காசுகளும் , டீசல் 76 காசுகள் உயர்ந்து 92.19க்கும் விற்பனைஇந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை போன்று பல மாதங்களுக்கு பின் சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 5 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின் தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE