அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
DRPGTA
7373761517
பெறுநர்:-
(பணிவோடு வணங்குகிறேன்)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை-9
ஐயா,
பொருள்:-
தமிழ் நாடு அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஒன்றிய அரசால் வழங்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்குவது குறித்த மனிதவள மேலாண்மை ( அவி IV) துறை அரசாணை எண் 120
(நாள் 01.11.2021)ஐ உடனடியாக திரும்பப் பெற்று பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து நடைமுறைபடுத்தப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டுதல் சார்பு:-
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பெற்று வந்த நடைமுறையினை கடந்த ஆட்சியாளர்கள் ரத்து செய்து அரசாணை வெளியிட்டார்கள்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக தாங்கள் இருந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டதை நீக்கி பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பழைய முறையிலான ஊக்க ஊதிய உயர்வை அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவோம் என்று அறிவித்து கண்டன அறிக்கையும் வெளியிட்டு இருந்தீர்கள்.
மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தீர்கள்..
ஆனால் இதற்கெல்லாம் மாறாக தற்போது தமிழக அரசால் தமிழ்நாடு அரசு பணியாளர் களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஒன்றிய அரசால் வழங்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும் என்று மனித வள மேலாண்மை துறையால் ஆணை வெளியிடப்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய அரசைப் பின்பற்றி தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறையால் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆயிரங்கள் செலவு செய்து கூடுதல் கல்வித் தகுதிக்கான பட்டத்தை பெற்று வருகிறார்கள்.
ஆனால் ஒன்றிய அரசைப் பின்பற்றி மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மிக குறைந்த அளவும், அதுவும் ஒருமுறை மட்டுமே ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது...
இன்று இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பள்ளிக் கல்வித் துறையில் முன்னணி இடத்தை தமிழ்நாடு பெற்றிருப்பதற்கு கிய காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகு கூடுதல் கல்வி தகுதியை பெற்று அது சார்ந்த நிகழ்கால தகவல்களை முற்போக்கு சிந்தனைகளை முற்போக்கு செயல்பாடுகளை அரசுப்பள்ளிகளில் பாடம் சார்ந்து செயல்படுத்தி வருவதும் ஒரு காரணம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பான செயல் திட்டங்களைத் தருவதில் தமிழக அரசு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வரும் சூழலில்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் செயல் முறையிலும் பேரறிஞர் அண்ணா வழங்கிய பழைய முறையிலான ஊக்க ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தி மீண்டும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி சார்ந்த நிகழ்வில் புதிய நம்பிக்கையை தாங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள் பெரும் கூடுதல் கல்வித்தகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமுதாயத்திற்கும் ஊக்கம் அளிப்பதோடு ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்க்கைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் 10.03.2020 க்கு முன்பாக உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற பள்ளிக்கல்வித்துறை முன் அனுமதி பெற்று எம்ஃபில் முடித்திருந்து பல்வேறு காரணங்களால் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் திரட்டப்பட்டு பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு பின் நிதித்துறையின் ஒப்புதல் பெற தலைமை செயலகத்திற்கு கடந்த 2021 மார்ச் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை மேற்கண்ட ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க நிதித்துறையால் ஆணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர்
எனவே மேற்கண்ட ஆசிரியர்களுக்குநிதித்துறை உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை வழங்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இது போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென்று தமிழகத்திலுள்ள அரசு பணியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து அதையும் டிசம்பர் 29 2021 ல் வழங்க ஆணையிட்டீர்கள்.
இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் தமிழக அரசு நிதிநிலை அடிப்படையில் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த ஆண்டில் எந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும்? என்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும். அதுவரை தமிழக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலை நீங்கி நம்பிக்கையோடு பொறுத்திருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
எனவே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கும் செயல்பாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய அரசைப் பின்பற்றாமல் பேரறிஞர் அண்ணா வழியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் பழைய நடைமுறை பின்பற்றுவது பற்றி வரும் பட்ஜெட்டில் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
அன்புடன்
ஆ.இராமு,
மாநில தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.
இடம்:- நாமக்கல்
தேதி;- 10.03.2022
நகல்
மாண்புமிகு
தமிழக நிதி அமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்
சென்னை-9
மதிப்பிற்குரிய தலைமைச் செயலாளர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை 9.,
மதிப்பிற்குரிய நிதித்துறை செயலாளர் அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை 9.,
மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முதன்மைச்செயலாளர் அவர்கள்.,
உயர் திரு த.உதயசந்திரன் இஆப அவர்கள்...
தலைமைச் செயலகம், சென்னை 9
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE