முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் எனக்கு எழுதவும், பேசவும் தெரியாது, அவரை போல எழுதும் முயற்சியில் ஒன்றுதான் என் சுயசரிதை புத்தகம் என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ’உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்பட பலரும் பங்கேறனர். இந்த விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
எத்தனை உயர் பொறுப்புக்கு வந்தாலும் நான் உங்களில் ஒருவன் தான்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் எனக்கு எழுதவும், பேசவும் தெரியாது, அவரை போல எழுதும் முயற்சியில் ஒன்றுதான் என் சுயசரிதை புத்தகம்.
இந்தி ஆதிக்கத்தை தற்போதும் எதிர்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
என்னை பண்படுத்திய கோபாலபுரம் இல்லம் குறித்தது தான் என் சுயசரிதை புத்தகம் கலைஞர் அமர்ந்த நாற்காலியின் அமர்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
அனைத்து மாவட்டங்களும் சீராக வளர்ச்சிடைய வேண்டும்.
மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட இயக்கவியலின் கோட்பாடு.
அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என என்னிடம் கேட்டார்கள் நான் அரசியலில்தான் இருந்திருப்பேன் என பதில் சொன்னேன்
அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது. அரசியல் என்பது என்னுடைய ரத்தத்தில் இருந்தது; எனது சிந்தனை, செயல் அனைத்துமே கழகம் தான் என்பது என் சுயசரிதையை வாசித்தால் தெரியும்.
அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது. அரசியல் என்பது என்னுடைய ரத்தத்தில் இருந்தது; எனது சிந்தனை, செயல் அனைத்துமே கழகம் தான் என்பது என் சுயசரிதையை வாசித்தால் தெரியும்.
நான் தனி மனிதன் அல்ல; ஒரு கூட்டம் என்பதை இதன் மூலமாக நான் சொல்லி இருக்கிறேன் திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு; திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE