Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 March 2022

3-வது பிரசவத்திற்கு விடுப்பு கோரிய வழக்கில் ஐகோர்ட் கருத்து

தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய தமிழக அரசுக்கு பாராட்டு: 3வது பிரசவத்திற்கு விடுப்பு கோரிய வழக்கில் ஐகோர்ட் கருத்து

தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேறுகால விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்திய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பி.கோலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் உமாதேவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ல் எனக்கு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2018ல் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றேன். பின்னர், ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்டேன். பின்னர் கருத்தறித்த எனக்கு பேறுகால விடுப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். 

மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுதியின் அடிப்படையில் இரண்டு குழந்தைகளின் மகப்பேறுக்கு மட்டுமே விடுப்பு கிடைக்கும். மறுமணத்தின் காரணமாக மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விதி இல்லை என்று கூறி எனது கோரிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்துவிட்டார். முதல் கணவர் மூலம் 2 குழந்தைகள் பெற்ற பிறகுதான் அரசு பள்ளி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தேன். எனவே, எனக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மகப்பேறு பலன்களைப் பெறுவதற்கான குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்தியசட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காதவரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 மேலும், தாய்மையின் முக்கியத்துவத்துவம் மற்றும் ஆழமான புரிதலாலும், புதிதாகப் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதனாலும் பேறுகால விடுப்பை ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திய தமிழக அரசை இந்த உயர்நீதிமன்றம் பாராட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES