Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 March 2022

வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? 14 நாள் விதி பற்றி தெரியுமா உங்களுக்கு?



வாட்ஸ்அப் அனைத்து பயனர்களுக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல சாதன ஆதரவை வெளியிடத் தொடங்கியுள்ளது. சமீபத்திய செயல்பாட்டின் புதிய அப்டேட் மூலம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவரும் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே நேரத்தில் வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தி பயன்பாட்டில் செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும். இந்த அம்சம் சில காலமாக பீட்டாவில் உள்ளது. இதன்படி, ஒரே நேரத்தில் நான்கு இணைக்கப்பட்ட சாதனங்களையும் ஒரு தொலைபேசியையும் வாட்ஸ்அப் பயனர்கள் பயன்படுத்தலாம்.

இருப்பினும், உங்களுடைய ஸ்மார்ட்போனின் வாட்ஸ்அப் கணக்கு 14 நாட்களுக்கு செயலற்ற நிலையில் இருந்தால், இணைக்கப்பட்ட சாதனங்கள் அனைத்தும் தானாகவே துண்டிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மல்டி டிவைஸ் சேவை என்று அழைக்கப்படும் இந்த பல சாதன ஆதரவு அம்சம் பற்றிய விவரங்களுடன் WhatsApp அதன் FAQ பக்கத்தை புதுப்பித்துள்ளது. வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் தங்கள் உடனடி செய்தியிடல் கணக்கை மடிக்கணினிகள் அல்லது பிசிக்கள் உட்பட நான்கு சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும்.

இந்த செயல்பாட்டை அணுக பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை இணையத்துடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 14 நாட்களுக்கு மேல் உங்கள் மொபைலைப் பயன்படுத்தாவிட்டால், இணைக்கப்பட்ட சாதனங்களிலிருந்து WhatsApp உங்களைத் தானாகவே துண்டிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி நடக்கும் அரட்டைகளில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்குகிறது என்பதை WhatsApp உறுதிப்படுத்துகிறது.

எனவே இணைக்கப்பட்ட கணினிகள் அல்லது மடிக்கணினிகளில் நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் செய்திகளை WhatsApp அல்லது மூன்றாம் தரப்பினரால் படிக்க முடியாது என்பதை வாட்ஸ்அப் அதன் சார்பில் உறுதிப்படுத்தியுள்ளது. உங்கள் WhatsApp கணக்கை இரண்டாம் நிலை சாதனத்துடன் இணைப்பது எப்படி? என்பதை பார்க்கலாம். பல சாதன அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும். முடிந்ததும், பல சாதனங்களில் WhatsApp ஐப் பயன்படுத்த, இந்தப் செயல்முறைகளைப் பின்பற்றலாம்.


இந்த 8 விஷயத்தை ஒருபோதும் செய்யதீர்.. இல்லையெனில் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம் செய்யப்படும்.. என்னென்ன தெரியுமா?

WhatsApp படி, இணைக்கப்பட்ட சாதனங்களில் நேரலை இருப்பிடத்தைப் பார்ப்பது சாத்தியமில்லை. வாட்ஸ்அப் வலையில் இருந்து ஒளிபரப்பு பட்டியல்களை உருவாக்குவது மற்றும் பார்ப்பது அல்லது இணைப்பு முன்னோட்டங்களுடன் செய்திகளை அனுப்புவது இரண்டாம் நிலை சாதனங்களில் செய்ய முடியாது. தவிர, ஐபோன் பயனர்கள் இணைக்கப்பட்ட சாதனங்களில் அரட்டையை நீக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. WhatsApp இன் பழைய பதிப்பைக் கொண்ட பயனரை அழைப்பது அல்லது செய்தி அனுப்புவது இணைக்கப்பட்ட சாதனத்தில் ஆதரிக்கப்படாது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES