Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 February 2022

Housing Loan : மார்ச் மாதத்திற்கு முன்பு வீடு வாங்குபவர்களுக்கு இப்படியொரு சலுகை

housing loan tax : தனிநபர்கள் மட்டுமே இந்தச் சலுகைக்கு உரிமை கோர முடியும். கூட்டு குடும்ப வருமானத்தின் கீழ் இந்தச் சலுகையை பெற முடியாது

வருமான வரிச் சட்டப் பிரிவு 80EEA கீழ், மலிவு விலை வீடுகளுக்கான கூடுதல் வரிச் சலுகை பலன்களை பெற வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பாக நீங்கள் வீடு வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால், 2022 - 23 பட்ஜெட்டில் இந்த வரிச் சலுகைக்கு நீட்டிப்பு வழங்கப்படவில்லை. ஆகவே, 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இது உங்களுக்கு கிடைக்காது.

சட்டப் பிரிவு 80EEA கீழ், வருமான வரிச் சட்டப்பிரிவு 24இன் படி நீங்கள் ரூ.2 லட்சம் வரி விலக்கு பெறுவதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக நீங்கள் ரூ.1.5 வரை வரிச் சலுகை பெற முடியும். மலிவு விலை வீடு வாங்குவதற்கான கடன் மீது நீங்கள் செலுத்தும் வட்டியில் இந்த சலுகை அளிக்கப்படுகிறது

அதாவது வருமான வரி சட்டப் பிரிவுகள் 80EEA மற்றும் 24 ஆகியவற்றை பயன்படுத்தி, தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடியும். தற்போது, பிரிவு 80EEA கீழ் நீங்கள் வரிச் சலுகை பெற வேண்டும் என்றால், பின்வரும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்தக் கடன் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் குடியிருப்பு வீட்டுக்கான பத்திரப் பதிவு மதிப்பு என்பது ரூ.45 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது. கடன் பெறும் நாளில், தனிநபரின் பெயரில் வேறெந்த வீடுகளும் இருக்கக் கூடாது

இதுகுறித்து வரி ஆலோசகர்கள் கூறுகையில், “பிரிவு 80EEA கீழ் நீங்கள் வரிச் சலுகை பெற வேண்டும் என்றால் உங்களுக்கான வீட்டுக் கடன் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள்கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டால், அடுத்து வரும் நிதியாண்டுகளில் உங்கள் கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரையிலும் நீங்கள் வரிச் சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

அதேசமயம், குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு மட்டும் தான் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், தனிநபர்கள் மட்டுமே இந்தச் சலுகைக்கு உரிமை கோர முடியும். கூட்டு குடும்ப வருமானத்தின் கீழ் இந்தச் சலுகையை பெற முடியாது. ஒரு நிதியாண்டில் தனிநபர் செலுத்தியுள்ள மொத்த வரி ரூ.2 லட்சத்தை தாண்டுகிறது என்றால், அவர் பிரிவு 80EEA கீழ் வரிச் சலுகை கோர முடியும்’’ என்று தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES