கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலமே, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில் காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி உள்ளிட்ட 3 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதல் இரவு வரை தரிசனத்துக்கான நேரம் கணக்கிட்டு , நாள்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE