Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 February 2022

போராட்டத்தில் இறங்கிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி



ஆசிரியர் கலந்தாய்வு மையம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

 சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க கோரியும், கூடுதல் ஆசிரியர் பணியிடம் நியமிக்க வேண்டியும் கலந்தாய்வு நடைபெறும் சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஷ், ஜெயக்குமார், சிங்கராயர், கல்வி மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பல்வேறு குளறுபடிகள் உடன் நடைபெறுவதை கண்டித்தும், கொரோனா காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக ஒதுக்கி இந்த பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், நியாயமான கோரிக்கைக்காக போராடிய ஆசிரியர்களை அவதூறாக பேசி கைது நடவடிக்கைக்கு தூண்டிய தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்தும் ஆசிரியர்கள் கோசங்களை எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் ஆசிரியர் நியமிக்கமால் கடந்த ஆட்சியில் கால தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு ஏழை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவித்து அந்த இடங்களில் மாறுதல் கோரி உள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்திப் பேசினார்.

இதுகுறித்து மாநில மையம் சார்பாக பள்ளிக்கல்வி ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட உயர் அலுவலர் களுக்கு எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES