Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

01 February 2022

குடும்ப ஒற்றுமை பெருக மூன்றாம்பிறையை வணங்குங்கள் சந்திரதரிசனம்

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

🌙

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். சிவபெருமான் தன் தலையில்v மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி 'சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார்.

🌙

எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் 'சந்திர தரிசனம் அல்ல". அந்த சிவபெருமானின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் 'ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!" அல்லது s'ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி" என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும்.

🌙

அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே mவராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

🌙

#மூன்றாம்பிறையை #வணங்குவதால்ஏற்படும்_நன்மைகள்.

🌙

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌙

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

🌙

மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

🌙

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

🌙

திருமணமானவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES