பள்ளி பரிமாற்ற திட்டத்தை, வரும் 25ம் தேதிக்குள் 'ஆன்லைனில்' நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள், வேறு பள்ளிகள் இருக்கும் இடத்துக்கு சென்று, அங்குள்ள இயற்கை மற்றும் கல்வி சூழல்களை அறிந்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த திட்டம் ஆன்லைன் வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியையும் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய இடங்களையும் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து, அதை மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில், காணொலியாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை, வரும் 25ம் தேதிக்குள் ஆன்லைனில் நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE