பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்திய பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியமாக வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டுக்கான அரசின் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 2022-23 நிதியாண்டுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கண்டறியப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் மட்டும் சுமார் 80 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் துறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதம் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி, அரசு தரப்பிலிருந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE