Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 February 2022

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் 2-வது இடம்





தமிழ்நாடு, அஞ்சல் வட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சுமார் 26.11 லட்சம் கணக்குகளுடன் இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளதாக முதன்மை அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதன்மை அஞ்சல் துறை தலைவர் பா.செல்வகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த ‘எந்த நேரமும் எங்கிருந்தும் அஞ்சல் சேமிப்புகள்’ என்ற அறிவிப்பானது அஞ்சல் வங்கியை மேலும் மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இத்திட்டத்தை, இந்தியா முழுவதும் 2022க்குள் விரிவுபடுத்துவதற்கான பணி விரைந்து நடந்து வருகிறது.

இதன்மூலம், இந்தியாவில் உள்ள சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள், 100 சதவீதம் மொத்த வங்கி சேவையின் கீழ் இணைக்கப்படும். இதேபோல், தமிழகத்தில் இயங்கக்கூடிய 11,858 அஞ்சல் நிலையங்கள் ஏற்கனவே மொத்த வங்கி சேவையில் இணைக்கப்பட்டு 100 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் அஞ்சலக மற்றும் வங்கி கணக்குகளின் இயங்குதள வசதியை வழங்குவதற்கான பணிகளை தொடங்கும். 

இவ்வசதி நடைமுறைப்படுத்தப்பட்டால், அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து எந்த ஒரு வங்கி கணக்கிற்கும், வங்கியில் இருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கும் பணப்பரிமாற்றம் செய்ய இயலும். குறிப்பாக, கிராமப்புறத்திலுள்ள விவசாயிகளும், மூத்த குடிமக்களும் இதன் மூலம் பெரிதும் பயன்பெறுவர்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள மொத்த அஞ்சல் நிலையங்களில் 10,260 அஞ்சல் நிலையங்கள் கிராமப்புறத்திலும், 1598 அஞ்சல் நிலையங்கள் நகர்ப்புறத்திலும் செயல்பாட்டில் உள்ளன. 2020ம் ஆண்டிலிருந்து அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதாச்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் அஞ்சலக சேமிப்பு கணக்குகளை துவங்குவது அதிகரித்து கொண்டே வருகிறது. 

அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 2.75 கோடி அஞ்சலக சேமிப்பு கணக்குகள் நடப்பில் உள்ளன. இந்த நிதியாண்டில், ஜனவரி வரை மட்டும் கிட்டத்தட்ட 27.86 லட்சம் புதிய கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. செல்வமகள் சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 26.11 லட்சம் கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது. சிறப்பான பல நல்ல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி இந்த பட்ஜெட் அறிவிப்பின் மூலம் விரைவில் புதிய இலக்கை அடையும்.

source
https://www.dinakaran.com/



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES