டிசம்பர் 31ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாளாக இருக்கும் நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆதார் - பான் இணைக்கவும் மக்களை ஊக்குவித்து வருகிறது.
மார்ச் 31, 2022க்குள் ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்காதவர்களுக்குத் தாமதம் கட்டணமாக 1000 ரூபாயை அபராதமாக விதிக்க மத்திய அரசு நிதியியல் கொள்கை 2021 அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.
பான் கார்டு செல்லாது
ஆதார் உடன் இணைக்காத பான் கார்டுக்கு அபராதம் மட்டும் அல்லாமல், பான் கார்டும் செல்லாத ஒன்றாக அறிவிக்கப்படும். புதிய பான் கார்டு வாங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயம் தேவை என்பதால் முன்கூட்டியே இணைப்பது நல்லது. இல்லையெனில் அபராதம் உடன் புதிய பான் கார்டு வாங்க வேண்டி வரும்.
சரி ஆதார் பான் இணைப்பது எப்படி, ஏற்கனவே ஆதார் பான் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை எப்படிச் செக் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
வருமான வரித் தளம் மூலம் இணைக்கலாம்
1. வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home
2. இடது புறம் இருக்கும் Quick Links பட்டியலில் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
3. குறித்த இணையப் பக்கத்தில் உங்கள் பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் இருக்கும் பெயர் ஆகியவற்றை நிரப்புங்கள்
4. உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருந்தால் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.
5. UIDAI அமைப்பிடம் உங்களது ஆதார் தகவல்களைச் சரிபார்க்க ஒப்புதல் அளிக்கச் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.
6. Captcha Code-ஐ பதிவு செய்து Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் மொத்த வேலையும் 5 நிமிடத்தில் முடித்துவிடலாம்.
எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி..?!
ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு UIDPAN என்ற பார்மெட்டில் எஸ்எம்எஸ் அனுப்பினால் போதுமானது. உதாரணமாக UIDPAN 123456789000 EPOPE1234E
ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..?
1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home
2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.
5. இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும். மேலே உள்ள வழிமுறையைக் கடைப்பிடித்து இணைத்திடுங்கள்.
MORE AADHAAR NEWS
SBI: Linking of Pan with Aadhaar is Mandatory for its customers
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE