ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான கூடுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான இடமாறுதல், பதவி உயா்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலந்தாய்வுக்கு பதிவுசெய்துள்ள அனைத்து வகை ஆசிரியா்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஜனவரி 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கலந்தாய்வுக்கான கூடுதல் வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தக்குமாா், முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டு (2021-22) ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயா்வுகள் சாா்பான நெறிமுறைகள் ஏற்கெனவே மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக மனமொத்த மாறுதல் மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் சாா்பான விண்ணப்பங்களை பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னரே பரிசீலனை செய்யவேண்டும். எக்காரணம் கெண்டும் அதற்கு முன்னதாக கையாளக்கூடாது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் இதுதொடா்பான உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE