கோவிட்-19 மீட்சியின் போது, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் ஒருவரின் உடற்பயிற்சி வழக்கத்தில் சுவாசப் பயிற்சிகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே தெரியும். கோவிட்-19 என்பது நுரையீரல் உட்பட உங்கள் சுவாசப் பாதையை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இதனால், நிறைய பேர் சுவாசப் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள், குறிப்பாக கொமொர்பிடிட்டிஸ் (அதாவது ஒரு நோயாளிக்கு ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்கள் அல்லது மருத்துவ நிலைமைகளில் இருப்பது) உள்ளவர்கள்.
கோவிட் -19 வைரஸ் உங்கள் நுரையீரலை பல வழிகளில் பாதிக்கலாம். வெப்எம்டி-யின் கூற்றுப்படி, வறட்டு இருமல் மிகவும் பொதுவான கோவிட்-19 அறிகுறியாக இருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு கோவிட் நோயாளிகள், இருமும் போது தடிமனான சளியையும், அதனால் நீண்ட நேரம் அடைபட்டிருக்கும் ஒரு நிலையையும் அனுபவிக்கின்றனர்.
எனவே, கோவிட்-19 மீட்சியின் போது, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் ஒருவரின் உடற்பயிற்சி வழக்கத்தில் சுவாசப் பயிற்சிகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
"ஆரோக்கியமான நுரையீரல் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் மற்றும் வயதான நுரையீரல் உள்ளவர்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று ஃபரிதாபாத் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்தின் கூடுதல் இயக்குநர் மற்றும் எச்.ஓ.டி ஆன டாக்டர் ரவி சேகர் ஜா கூறியுள்ளார்.
சிஎன்என் வழியாக வெளியான ஒரு அறிக்கையில், டாக்டர் மேத்யூ ஷ்மிட் (நுரையீரல் மருத்துவம், பீட்மாண்ட் ஹெல்த்கேர்), கோவிட்-19 அல்லது பிற நோய்களில் இருந்து மீண்டு வரும்போது நுரையீரலில் உள்ள சளியை அகற்ற எளிய மற்றும் பயனுள்ள சுவாசப் பயிற்சியை பரிந்துரைக்கிறார்.
அதில் ஒன்று தான் ரூல் ஆஃப் த்ரீஸ் (Rule of threes). இது ஒரு சுவாசப் பயிற்சி ஆகும். இதன் கீழ் நீங்கள் மூன்று முறை ஆழமாக சுவாசிக்க வேண்டும், பின்னர் மூன்று முறை இரும வேண்டும் மற்றும் இதை மூன்று முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
செய்வது எப்படி?
- முதலில், நுரையீரல் விரிவாக்கத்திற்கு ஈர்ப்பு விசையை அனுமதிக்க இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும்.
- உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்
- பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும்
- மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது, மூன்று முறை வலிமையாக இரும வேண்டும்.
- இந்த மொத்த மூச்சு பயிற்சியையும் மூன்று முறை செய்யவும்.
இந்த பயிற்சியின் பலன்களை விளக்கும் சாரதா மருத்துவமனையின் சுவாச மருத்துவப் பேராசிரியர் டாக்டர் தேவேந்திர குமார் சிங்கின் கூற்றுப்படி, “உங்கள் மூக்கின் வழியாக ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிப்பதன் விளைவாக கீழ் விலா எலும்புக் கூண்டு விரிவடையும், இது வயிற்றை முன்னோக்கி நகர்த்தவும் அனுமதிக்கிறது. மேலும் இந்த பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தவும் வழிவகுக்கும்." என்கிறார்.
"நுரையீரலில் ஆழமாக ஆக்சிஜனை பெறுவதன் மூலமாகவும், சளி மற்றும் பிற திரவங்களை வெளியேற்றுவதன் மூலமும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு வருவதன் மூலமாகவும் நம்மால் நுரையீரலின் திறனை அதிகரிக்க முடியும். இது கோவிட் மற்றும் பிந்தைய கோவிட் சிக்கல்களுக்கு தீர்வாக மாறுகின்றனர்" என்றும் டாக்டர் சிங் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE