கொரோனா பரவலை தடுக்க, வரும் ஞாயிற்றுக்கிழமையான 9ம் தேதி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது அழைப்புக் கடிதம் காண்பித்து, தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம்.
முழு ஊரடங்கு நாளில் நடக்கும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோருக்கு, காவல் துறையினர் அனுமதி வழங்கி, முழு ஒத்துழைப்பு அளிப்பர் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஊரடங்கு நாளில் போட்டி தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி வழங்கப்படும் என அரசின் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, நாளையும், நாளை மறுநாளும் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட எழுத்து தேர்வுகள், எந்த மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி நடக்கும்.
தமிழக நகரமைப்பு துறையில் கட்டட கலை திட்ட உதவியாளர் பணிக்கு, 8ம் தேதியும்; புள்ளியியல் சார்நிலை பணிக்கு, 9ம் தேதியும் தேர்வு நடத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக நகரமைப்பு துறையில் கட்டட கலை திட்ட உதவியாளர் பணிக்கு, 8ம் தேதியும்; புள்ளியியல் சார்நிலை பணிக்கு, 9ம் தேதியும் தேர்வு நடத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE