Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 January 2022

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக,தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 17,394 பேர் பாதிப்பு

தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 17,394 பேர் பாதிப்பு; சென்னையில் 7,372 பேர் பாதிப்பு; 19 பேர் உயிரிழப்பு
 
சென்னை: தமிழகத்தில் மேலும் 17,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 28,47,589 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழகத்தில் மேலும் 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 28,47,589 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4,039 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,21,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,905 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 07 பேரும், அரசு மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 7,372 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 6,08,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 5,89,54,751 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,56,281 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 88,959 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16,62,809 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 10,652 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 11,84,742 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 7,282 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 321 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 252.

* தமிழகத்தில் இதுவரை 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 179 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னை - 115, செங்கல்பட்டு, மதுரையில் தலா 9, திருவள்ளூரில் 6, திருச்சி 5, கோவை, ராணிப்பேட்டை தலா 4, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருவண்ணாமலையில் தலா 3, சேலம், விழுப்புரம், விருதுநகர் தலா 2, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லையில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா - 1, புதுச்சேரி -3, ஆந்திரப்பிரதேசத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES