பிளஸ் 2 திருப்புதல் தேர்வின்போது, தேர்வுத்துறையால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிரந்தரப்பதிவெண், மாணவர்களின் தேர்வு எண்ணாக பயன்படுத்தப்படவுள்ளது.
உடுமலை கல்வி மாவட்டத்தில்,பொதுத்தேர்வுக்கு முன்னதாக, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும் வகையில், திருப்புதல் தேர்வு நடத்தப்படவுள்ளது.அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 19 முதல் 27ம் தேதி வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 19 முதல் 28ம் தேதி வரையிலும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக, பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உரிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்புதல் தேர்வுக்கான விடைத்தாள்கள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கிடையே பரிமாற்றம் செய்து, மதிப்பீடு செய்யப்படும்.பொதுத்தேர்வு போன்று, வகுப்பறைக்கு, 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வினாத்தாள்களை, உரிய மையத்திலிருந்து தேர்வு நாளன்று, தலைமையாசிரியர்கள் பெற்று பள்ளியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.பின், தேர்வு தொடங்குவதற்கு, 15 நிமிடம் முன், வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டு, அறைக் கண்காணிப்பாளர்களிடம் அளிக்க வேண்டும்.தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை பாடவாரியாகவும், பயிற்று மொழிவாரியாகவும் ஒரு கட்டுக்கு, 100 விடைத்தாள்களுக்கு மிகாமல் கட்ட வேண்டும்.
அதன் மீது 'பண்டல் ஸ்லிப்' ஒட்டப்படும். அதில், பள்ளி முத்திரையோ, எந்தவொரு ஆசிரியர்களின் கையொப்பமோ இருத்தல் கூடாது. இவை, மாவட்டக்கல்வி அலுவலரால் தெரிவிக்கப்படும் மையத்தில், அன்றைய தினமே ஒப்படைக்கப்படும்.குறிப்பாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வுத்துறையால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிரந்தரப் பதிவெண், தேர்வு எண்ணாகப் பயன்படுத்தப்படும்.இதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட பள்ளி எண், பதிவு எண்ணாக வழங்கப்படும்.விடைத்தாள்களில், வேறு எந்தவொரு குறியீடும் இருத்தல் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE