கிராமங்களில் புதிய அரசு பள்ளிகள் துவங்குவது தொடர்பாக ஆய்வு நடத்தி, கருத்துரு அனுப்ப வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க பள்ளித் துறை இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும், புதிய தொடக்க பள்ளிகள் துவங்குவது தொடர்பாக கருத்துரு தயார் செய்து, இயக்குனரகத்துக்கு அனுப்பலாம்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின், 2022 - -23ம் ஆண்டு வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க, இந்த கருத்துருக்களை, முதன்மை கல்வி அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.புவியியல் தகவல் முறையை பயன்படுத்தி, புதிய தொடக்க பள்ளி துவங்குவதற்கான இடம் சார்ந்த, கிராம நிர்வாக அலுவலரின் அசல் சான்றையும் இணைக்க வேண்டும். பள்ளிக்கான இடம், சிட்டா, பட்டா போன்ற நிலம் சார்ந்த ஆவணங்களையும் கருத்துருவில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE