இந்திய வருமான வரியின் விதிகளின்படி தனி நபர் ஒருவர் தனது சொந்த தேவைக்காக கார் வாங்கினால் அது ஆடம்பர பொருளாக பார்க்கப்படுகிறது. அதற்கு எந்த வரிச் சலுகையும் கிடையாது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் இந்திய அரசு 80EEB என்ற புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்க வரிச் சலுகையை அறிமுக செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் நிபந்தனைகள் என்ன?
>தனி நபர் மட்டுமே இந்த வரிச் சலுகையை பெற முடியும்.
>நான்கு மாற்று இருசக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த வரி விலக்கு உண்டு.
>எலெக்ட்ரிக் வாகன கடனில் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கிடைக்கும்.
>ஒரு முறை மட்டுமே இந்த வரி விலக்கை பெற முடியும். அதுவும் எலெக்ட்ரிக் வாகனம் சொந்தமாக வைத்திருக்காத நபருக்கு மட்டுமே இந்த வரி விலக்கு கிடைக்கும்.
>ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 32, 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.
>இது தவிர இன்னும் எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Source : TimesNow
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE