* தென் ஆப்ரிக்காவில் கிளம்பிய ஒமைக்ரான் பல நாடுகளில் பரவி வருகிறது.டெல்டாவை விட நான்கு மடங்கு வேகமாக பரவும். இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படலாம்.
* நோய் பாதிக்கப்பட்ட முதியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஒரு லட்சம் நோயாளிகளில் 1500 பேர் கடுமையாக பாதிக்கப்படலாம்.
* காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு, உடல் வலி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுகவும். தவறினால் ஆபத்து ஏற்படும்.
* முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் பாதிக்கப்பட்டால்,நோயாளிகளை காப்பது சவாலாகும்.
பாதிப்பு குறைவு
* ஒமைக்ரான் வீரியம் குறைந்தது. ஆக்சிஜன் வென்டிலேட்டர் தேவை இருக்காது. இறப்பு குறைவு. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவருக்கு பாதிப்பு குறைவு.
* ஒமைக்ரான் நுரையீரலை அதிகம் தாக்காது. இதனை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவை.
தடுப்பூசி ஆயுதம்
* மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், முழு ஊரடங்கு அவசியமில்லை. சுயகட்டுப்பாடு போதும்.
* காற்றின் மூலம் வைரஸ் பரவுவதால், கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
* அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
* சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம்.
* முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
* தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக் கொள்ளவேண்டும்.
* இரண்டு ஆண்டுகளாக கொரோனா அனுபவம் நமக்கு உண்டு. விஞ்ஞான பூர்வமான முறையில் பொறுப்பாக நடந்து கொண்டால், ஒமைக்ரானை வெல்வது எளிது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE