கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பேருந்துகளில் நின்றபடி பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 1,489 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பேருந்தில் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் சென்னை தியாகராய நகர் பகுதியில் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. முகக்கவசம் அணிந்தோர் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE