Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 January 2022

பெண் குழந்தைகளுக்காகவே செயல்படும் 4 திட்டங்கள்


பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதையும் அவர்கள் கல்வி தடைபடாமல் இருப்பதையும் இந்த திட்டம் உறுதி செய்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை இப்பொழுதும் கூட ஒரு பெண் குழந்தை பிறந்த உடனேயே அந்தக் குழந்தைக்கான திருமண செலவுக்காக பெற்றோர்கள் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள்.

ஏனென்றால், இந்தியாவில் திருமணம் மிகவும் காஸ்ட்லியானது. அதே போல, இன்னும் வரதட்சணை கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், வசதியற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சூழலில் வளரும் பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளை கற்றுக்கொண்டு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்றே வளர்க்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி பெண்குழந்தைகள் பருவம் அடைந்த பிறகு அவர்களுக்கு பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கல்வியும் தடை செய்யப்படுகிறது. இவற்றையெல்லாம் சரி செய்வதற்காக, பெண் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப்பற்றிய விவரங்கள் இங்கே.

சுகன்யா சம்ரிதி யோஜனா

குழந்தைகளின் நலம், எதிர்காலம் மற்றும் மேம்பாட்டுக்காக இந்த திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இந்தத் திட்டத்தில் இணையலாம். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 15 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளின் முடிவில் கணிசமான தொகை, கிட்டத்தட்ட முதலீடு செய்த தொகையின் இரட்டிப்புத் தொகையாக குழந்தைக்கு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் முதல் முதலீட்டுத் தொகையாக 250 ரூபாயை செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 150 ரூபாயின் மல்டிப்பிள்ஸ் ஆக, ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 7.60 சதவிகித வட்டி அடிப்படையில் 43.50 லட்ச ரூபாய் கிடைக்கும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு பெறலாம். நீங்கள் முதலீடு செய்யும் பணம், அதில் பெரும் வட்டி மற்றும் முதிர்வடைந்த தொகை ஆகிய மூன்று தொகைகளுக்குமே வருமான வரி விலக்கு உண்டு.

பத்து வயதுக்குள் இந்த திட்டத்தில் பணம் செலுத்தத் தொடங்கினால் பெண்ணின் இருபதுகளில், கணிசமான தொகை கிடைக்கும் போது, அவை உயர் கல்விக்கு உதவியாக இருக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் பெண்களுக்கு கல்வியை அளிக்க பெற்றோரிடம் பணம் இல்லை என்ற வருத்தம் ஏற்படாமல் இருக்கலாம். சரியான வயதில் உங்கள் பெண் குழந்தைக்கு இந்த இந்த முதலீட்டுத் திட்டத்தில் பணம் சேர்க்கத் தொடங்கினால் உங்கள் குழந்தை கல்லூரியில் படிக்கும் போது அல்லது உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கும் கூட இந்த பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

பாலிக்க சம்ரிதி யோஜனா

இந்தத் திட்டம் மத்திய அரசால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பின்னணியிலிருந்து வரும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதையும் அவர்கள் கல்வி தடைபடாமல் இருப்பதையும் இந்த திட்டம் உறுதி செய்கிறது. 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளை குடும்பத்தில் வரவேற்பது மற்றும் பெண் குழந்தைகளை எதிர்மறையாகப் பார்ப்பதை நிறுத்துவதாகும். திட்டத்தில் பதிவு செய்திருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி படிப்போடு மாதாந்திர ஸ்காலர்ஷிப்களையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி வருமானம் ஈட்ட உதவும் பல்வேறு வேலைகளையும் கற்றுக்கொடுத்து பொருளாதார சுதந்திரத்தை பெறுவது போன்ற உதவிகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.

Beti Bachao Beti Padhao - பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் பெண் குழந்தையை படிக்க வையுங்கள்

பெண் குழந்தைகள் கல்வி. மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான பல திட்டங்களில் இந்த திட்டம் மிகவும் பிரபலமானது. பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்த திட்டம் பெண் குழந்தை கல்விக்கு உதவியாக இருக்கிறது. கல்வி மட்டுமின்றி குடும்ப சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது, பெண்களுக்கு மேம்பட்ட அல்லது உயர்கல்வி கிடைக்க வேண்டும் ஆகிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது.

Ladli திட்டம்

இந்த திட்டம் ஹரியான மாநில அரசால், பெண்கள் மற்றும் குழந்தை நல மேப்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டது. ஹரியான மாநிலம், ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மாநிலம் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தாலே கெட்ட சகுனமாக நினைக்கும் பல பகுதிகள் உள்ளன. எனவே, இதை மாற்றுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES