PLAY VIDEO
தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முதன்முறையாக சலுகை அறிவிப்பு.
கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம், பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அதை வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேல் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். 10, +1 மற்றும் +2 பொதுத்தேர்வு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுத்தேர்வு தேர்வுகளுக்கான அறிவிப்புகளை தேர்வுத்துறை தொடந்து வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை கூறியுள்ளதாவது., 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அதை வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்திட வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பொதுத்தேர்வில் முதன் முறையாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமன்றி பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC, SC, ST, SCA மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வகுப்புவரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முழுமையாக தேர்வுகள் நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த முறை கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே கட்டணம் வசூலிக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் கடந்த முறை பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +2 தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த முறை 2021-22 இந்த பேட்ச் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை என்ற சூழ்நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது
source
https://tamil.samayam.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE