Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

18 January 2022

ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் திறன் வலுவூட்டல் பயிற்சி நடத்துவது குறித்து வெளியிட்ட அறிக்கை



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப் பார்வைக்காக ஆசிரியர் சமுதாயத்தின் மனம் திறந்த மடல்.

AIFETO

17.01.2022

தமிழக ஆசிரியர் கூட்டணி, பதிவு எண் : 69/1983, அரசு அறிந்தேற்பு எண் 36/ 2001.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்து தரப்பினராலும் நெகிழ்ந்து பாராட்டும் வண்ணம் அன்றாடம் நடைபெற்று வருவதை கண்டு மகிழ்ந்து வருகிறோம். நடுஇரவில் கூட சாலைகள் செப்பனிட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் சீர் படுத்தி வரும் முதலமைச்சர் அவர்களையும் அரசு நிர்வாகத்தில் உற்ற துணையாக இருந்து எளிமையின் அடையாளமாக செயல்பட்டு வரும் போற்றுதலுக்குரிய தமிழ்நாடு அரசின் மதிப்புமிகு தலைமைச் செயலாளர் அவர்களையும் எண்ணி மகிழ்ச்சி பெருக்கில் பூரிப்படைந்து வருகிறோம். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் மதிப்புமிகு இந்திய ஆட்சி நிர்வாகப் பணி உட்பட உயர் பணியில் இருப்பவர்களும் சரியான நல்ல மக்களாட்சி நடைபெறுவதற்காக அரும்பாடுபட்டு வருகிறார்கள் என்பது எதார்த்தமான உண்மையாமாகும்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆர்வம் உள்ளவர். ஓய்வறியாது செயல்படக் கூடியவர், முற்றிலும் வெளிப்படைத்தன்மை உடையவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் சில அலுவலர்கள் அன்றாடம் ஆசிரியர் விரோதச் செயல்பாடுகளில் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள் என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு பலமுறை கொண்டு வந்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்பதை வேதனை உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

உயர்நிலைப் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே தொடக்கக்கல்வித்துறையில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் ,மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும், கற்பித்தல் பணியினை, பள்ளிச் சூழலினை அவர்களுக்கு மலரச் செய்ய வேண்டும் என தொடர்ந்து ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.ஆனால் சுகாதாரத்துறை எடுத்த முடிவுதான் இறுதியாகப் போனது என்பதை உணர்கிறோம்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் காலத்தில் பிடிவாதமாக திறன் வலுவூட்டல் பயிற்சி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு சென்று வருகின்ற ஆசிரியர்கள் மாவட்டங்கள் வாரியாக தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அரியலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிற்சி காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு அனுப்பி இருந்தோம். அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மீண்டும் பயிற்சியினை பத்தொன்பதாம் தேதி முதல் தொடங்கி நடத்திட அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் பயிற்சி மையத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசிரியர் குடும்பங்களை இழந்து இன்னமும் ஆறாத்துயரில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கை பெருகி உடல்நலச் சேதாரம், உயிர்ச்சேதாரம் ஏற்படுமேயானால் காலம் முழுவதும் தலைவர் கலைஞர் அவர்களின் அரசுக்கு, தலைவர் தளபதியார் அவர்களின் அரசுக்கு மிகப்பெரிய சங்கடத்தை உருவாக்கி விடுமோ என்று எங்களைப்போன்ற உணர்வாளர்கள் அச்சப்பட்டு வருகிறோம்.

மாநராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் காலம் தூரத்தில் இல்லை. முற்றிலும் உள்நோக்கத்துடன் தான் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பாதுகாப்பு அரசின் மீது திட்டமிட்டே சில அலுவலர்கள் வெறுப்புணர்வினை பெருக்கி வருகிறார்கள் என்பதை வாய்ப்பளித்தால் ஆதாரமுடன் எங்களால் விளக்கி சொல்ல முடியும்.

கனிவான வேண்டுகோள்:

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பயிற்சியினை நடத்திதான் ஆக வேண்டும் என்றால் இணைய வழியிலாவது நடத்த திட்டமிட்டு பாதிப்புகளை தவிர்க்க வேண்டுமாய் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

போற்றுதலுக்குரிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களும், போற்றுதலுக்குரிய முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் 1 அவர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான தனிப் பார்வைக்கு கொண்டு வந்து தீர்வு காண வேண்டுமாய் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

நல்லெண்ண அரசின் மீது முழுநம்பிக்கை வைத்து கரம் பிடித்து தொண்டாற்றி வரும் இயக்கங்களின் மூத்த தலைவர்களில் ஒருவர்,

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES