மெசேஜிங் சர்வீஸ்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு விருப்பமான ஒரு app-ஆக இருந்து வருகிறது வாட்ஸ்அப். உலகம் மற்றும் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் WhatsApp-ஐ பயன்படுத்தி வரும் சூழலில், தனியுரிமை விதிமுறைகளை (terms of privacy) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் WhatsApp-க்கு உள்ளது. பொறுப்பை நிறைவேற்றும் வகையில் privacy-ல் புதிய அப்டேட்டை மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் யூஸர்களின் தனியுரிமை அதாவது ப்ரைவஸியில் ஊடுருவும் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை WhatsApp பிளாக் செய்கிறது. தங்களது இந்த புதிய தனியுரிமை அப்டேட் (new privacy update), அன்நோன் கான்டாக்ட்ஸ் ( unknown contacts - தெரியாத தொடர்புகள்) யூஸர்களின் "கடைசியாக பார்த்தது" (Last Seen) மற்றும் ஆன்லைன் ஸ்டேட்டஸை (online status) பார்ப்பதை தடுக்கும் என்று WhatsApp கூறி இருக்கிறது.
இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 டிவைஸ்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யூஸர்களின் தனியுரிமையை அதிகரிக்கும் பல அப்டேட்களில் Whatsapp ஏற்கனவே செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், மிக முக்கிய அப்டேட்களில் ஒன்றாக குறிப்பிட்ட நபர்களிடமிருந்து வாட்ஸ்அப்-பை கடைசியாக பார்த்த தகவலை மறைப்பது உள்ளிட்ட அம்சத்தை யூஸர்களுக்கு வழங்கி இருக்கிறது.
WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கை படி, Android டிவைஸில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் iOS-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருக்கும் சில தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் மூலம் Whatsapp யூஸர்களின் 'online' ஸ்டேட்டஸ் நேரம் மற்றும் 'Last Seen' நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய அணுகலாம். ஆனால் Whatsapp இப்போது புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் சில பாதுகாப்பு அம்சங்கள் அத்தகைய தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள், யூஸர்களின் மேற்கண்ட டேட்டாவை அணுகுவதை தடுக்கிறது.
இந்த சமீபத்திய அப்டேட்களுக்கு பின், நீங்கள் வேறொரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டுடன் Chat செய்யவில்லை என்றால், Last Seen-ஐயும், online ஸ்டேட்டஸையும் WhatsApp எதிர் நபருக்கு காட்டாது. இதுநாள் வரை இந்த தகவலை காட்டி வந்த சில தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் தெரியாத தொடர்புகள் உங்களுடன் WhatsApp-ல் Chat செய்யாததால், நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது அவர்களால் பார்க்க முடியாது" என்று WABetaInfo கூறி இருக்கிறது.
இதனிடையே யூஸர்கள் தங்கள் 'Last Seen' மற்றும் குறிப்பிட்ட சில தொடர்புகளிடமிருந்து profile picture உள்ளிட்ட சில தகவல்களை கட்டுப்படுத்த உதவும் அம்சத்திலும் WhatsApp செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே போல disappearing message-களுக்கு மேலும் 2 புதிய கால அவகாசங்களை சேர்க்க உளளதாக WhatsApp கூறி இருக்கிறது. தற்போதுள்ள 7 நாட்கள் என்ற ஆப்ஷனுடன், 24 மணிநேரம் மற்றும் 90 நாட்கள் உள்ளிட்ட இருஆப்ஷன்கள் விரைவில் சேர்க்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE