தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் துறைத்தேர்வுகளில் கலந்து கொண்டு கொள்குறி வகையிலான தேர்வுகளை எழுதிவிட்டு, விரிந்துரைக்கும் தேர்வுகளில் கலந்து கொள்ளாத நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய துறைத்தேர்வில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மேற்கு ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் விஷ்ணு மற்றும் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகிற்குட்பட்ட அம்மா களத்தூர் ஊராட்சி செயலாளர் மூர்த்தி ஆகியோர் கொள்குறி தேர்வில் மட்டுமே கலந்து கொண்டு விரிந்துரைக்கும் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்குறி மற்றும் விரிந்துரைக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த 2 தேர்வில் கொள்குறி தேர்வில் மட்டுமே கலந்து கொண்ட இவர்கள் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) துறைத்தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகளின் படி, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்தவொரு துறை தேர்வுகளிலும் கலந்து கொள்ளும் அலுவலர்கள், பணியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் உட்ப அனைவரும் கொள்குறி மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான 2 தேர்விலும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இதில் ஏதேனும் ஒரு தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் தேர்வாணையத்திடம் இருந்து தகவல் பெரும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் துறைத் தேர்வுகளை எழுதும் ஒவ்வொரு அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் நேரடி உதவியாளராக பணிபுரிந்து வரும் அனைத்து அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், தொழில்நுட்ப அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவிக்குமாறு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குனர், உதவி இயக்குனர், அனைத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE