மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு நடனமாடி பாடம் நடத்தும் ஆசிரியரை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஆர்வம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிலேயே இருந்தனர்.'ஆன்லைன்' வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு, பாடம் எடுக்கப்பட்டது.பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள தற்போது, 'மாணவர்களின் விருப்பத்தையும், ஆர்வத்தையும் துாண்டும் வகையில் பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது.அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் தென்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியையாக பணிபுரியும் கவிதா என்பவர், பாடம் நடத்தி வருகிறார்.
சினிமா பாடல்
எழுத்துகளை எளிதாக நினைவூட்டும் வகையில், தமிழ் எழுத்துகளை சினிமா பாடல் மெட்டில் பாடி மற்றும் நடனமாடி, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்.'சொடக்கு மேலே சொடக்கு போட்டு...' என்ற சினிமா பாடல் மெட்டுக்கு ஏற்ப எழுத்துகளை கூறி, அதற்கேற்ப நடனமாடி, குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்; பரதத்திலும் எழுத்துகளை
புரியவைக்கிறார்.குழந்தைகளும், ஆசிரியர் சொல்படி நடனமாடி, தமிழ் எழுத்துகளை கற்றுக்கொள்கின்றனர். வித்தியாசமான முறையில் பாடம் நடத்தும் ஆசிரியரை, மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டுகின்றனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE