Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 December 2021

போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்காகவே இருக்கும் சேமிப்பு திட்டம் இது! உங்களுக்கு தெரியுமா?



போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் 5 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைத்திருக்கும் வட்டி மட்டுமே ரூ. 66,000.

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம்.

மிடில் கிளாஸ் தொடங்கி அப்பர் கிளாஸ் வரை போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். காரணம் இதில் ஆபத்து குறைவு முதலீட்டில் நல்ல லாபமும் பார்க்கலாம். இந்திய தபால் துறை மாதாந்திர வருமானத் திட்டம் மட்டுமல்லாமல் பல சேமிப்புத் திட்டங்களை கொண்டுள்ளது.அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மாதாந்திர வருமான திட்டம். இதில் குழந்தைகளும் சேமிக்கலாம் அவர்களின் பெற்றோர்களும் சேமிக்கலாம்.

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டத்தை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் தொடங்க முடியும். மாதம் மாதம் வரும் வட்டியை அவர்களின் கல்வி செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளின் கல்வி செலவுக்காக திட்டமிடும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தை தொடங்கினால் பலன் கிடைக்கும்.

இந்த மாதாந்திர வருவாய் திட்ட கணக்கில் குறைந்தபட்சமாக ரூ. 1000 முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக ரூ. 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்தில் கூட்டுக் கணக்கில் (Joint account) அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரையும் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் டிடிஎஸ் இல்லாததால், பிரிவு 80C கீழ் கிடைக்கும் நன்மைகள் இதில் கிடைக்காது. மேலும் இதில் கிடைக்கும் வட்டிகளுக்கு வரி உண்டு.இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது

இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள் ஆகும். உங்கள் பிள்ளைகள் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மாதம் தேவைப்படும் கல்வி செலவை பூர்த்தி செய்ய நீங்கள் இந்த திட்டத்தில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால் போதும். 6.6% வட்டிக்கு இந்த தொகைக்காக மாதம் ரூ. 1100 கிடைக்கும். 5 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைத்திருக்கும் வட்டி மட்டுமே ரூ. 66,000. இப்படி முதலீடு தொகையை பொறுத்து மாத வருவாய் மாறுபடும். தங்களின் தேவைக்கு ஏற்ப பெற்றோர்கள் குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை தொடங்கலாம்.வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES