தமிழில் இயல், இசை, நாடகம் என்னும் பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு, கலை பண்பாட்டு துறை சார்பில், 'கலைமாமணி' விருதுகள் வழங்கப்படும். அத்துடன், தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபடுவோருக்கு, 'தமிழ் புத்தாண்டு விருது, உலக தமிழ்ச் சங்க விருது, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக விருது' என, 78 விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 97வது பிறந்த நாள் விழாவில், தமிழறிஞர் மூவருக்கு, 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அடுத்த மாதம், 15ல் நடைபெறும் திருவள்ளுவர் திருநாளில், இந்த விருதை வழங்கும் வகையில், தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவுக்கு, உறுப்பினர் செயலராக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன்.சென்னை பல்கலை துணைவேந்தர் பொற்கோ, ராணி மேரி கல்லுாரி முன்னாள் முதல்வர் சாரதா நம்பிஆரூரான், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் மருதநாயகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய், பாராட்டு பத்திரம், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE