ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
ரேஷன் கார்டு என்பது ஒரு நபரின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது குடியுரிமைக்கான சான்றாகவும் இருக்கிறது. கூடுதலாக, ரேஷன் கார்டு உணவு பொருட்களை வாங்கும் ஆவணமாகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குறைந்த விலைக்கு பெற முடியும். ஆனால் ரேஷன் கார்டை பெறுவதற்கான நடைமுறை சிக்கலானதாகவும், நேரத்தை எடுத்துக்கொள்ளும் வகையிலும் உள்ளது. இதனால் பலரும் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர்.
ஆனால் தற்போது ஜூன் 30, 2030 வரை செல்லுபடியாகும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் உங்கள் ரேஷன் கார்டை எளிதாகப் பெறலாம். மேலும் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கவும் முடியும்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்?
இந்தியாவில் உள்ள அனைத்து குடுமப்த்தினரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் அதே மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் தகுதியுடையவராக இருந்தும உங்கள் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, கீழ்காணும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
* ஆதார் அட்டை
* மின் ரசீது
* பான் கார்டு
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* வருமான சான்றிதழ்
* வங்கி பாஸ்புக்
* சாதி சான்றிதழ்
ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
1. ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டலுக்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. இப்போது ஒரு படிவம் திரையில் தோன்றும். அந்த நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
4. அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர் உங்கள் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
5. பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
6. பின்னர் நீங்கள் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு reference எண் கிடைக்கும், அதை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து, உங்கள் விவரங்களை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும்.
குறிப்பு : நீங்கள் இந்த ஆன்லைன் போர்ட்டலில் உங்கள் முகவரியையும் மாற்றலாம், குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம் மற்றும் நீங்கள் விரும்பினால் அவர்களை நீக்கலாம்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE