நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளின் பதவிகளை பறிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை இருவர் நடத்தி வருகின்றனர். அந்த தொழில் நடத்திவரும் இடம் அரசின் நிலம் என்றும், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் நீண்டகாலமாக அந்த இடத்தை அனுபவித்து வருவதால் நிலத்தை தாங்களே பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்கமறுத்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும், இதுபோல் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்புவதுடன் பதவிகளை பறிக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்கவேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இரு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE