Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

15 December 2021

தள்ளிப்போகிறது நகர்ப்புற தேர்தல்?

நகராட்சி நிர்வாகத் துறையின் தாமதத்தால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்கான பணிகளில், மாநில தேர்தல் கமிஷன்கவனம் செலுத்தி வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்குவது உள்ளிட்ட பணி நடந்து வருகிறது.
நகராட்சி நிர்வாகத் துறை, இப்பணிகளை வேகப்படுத்தவில்லை. இதேபோல, பல்வேறு நகராட்சிகளுக்கு கமிஷனர்கள், பேரூராட்சிகளுக்கு செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 

மாவட்ட கலெக்டர்அலுவலகங்களில், தேர்தல் பணிகளை கவனிக்கும் உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நகராட்சி நிர்வாகத் துறை ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லாததால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.

எனவே, மழை பாதிப்பை காரணம் கூறி, தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் பெற, உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக, தேர்தல் கமிஷனில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES