பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பரிசுத் தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அரசு பொங்கலை முன்னிட்டு 2.கோடியே 15 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள், கரும்பு, என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க உள்ளது. இதற்காக, 1,160 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள நியாயவிலைக்கடைகளில் இரு பணியாளர்களும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளில் 3 பணியாளர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இதற்கென கட்டுப்பாட்டு அறை அமைத்து, அங்குத் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமித்துப் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வழங்குவதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கலுக்கு ரொக்கத்தொகை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE