கொரோனா தொற்று பரவிய நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு அமலானது. அப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் தினமும் அலுவலகத்துக்கு வரவும், பல்வேறு பணிகளை பார்க்கவும் உத்தரவிடப்பட்டது. அரசுஊழியர்களும், ஆசிரியர்களும் தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்நிலையில், அரசு பணிகளில் ஈடுபடுவோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கான மருத்துவ செலவுக்கான தொகையை அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெறலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 7.5 கோடி ரூபாயை மருத்துவ காப்பீடு நிறுவனங்களுக்கு அரசு வழங்கியது.இதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மேற்கொண்டால், சிகிச்சை செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் முறை அமலானது. அரசு உத்தரவிட்டதும்,மருத்துவ செலவு வழங்குவது துவங்கியது.
ஆனால், சில மாதங்களாக மருத்துவ செலவு அளிக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதித்த ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் மருத்துவ செலவு கோரி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அரசிடமிருந்து நிதி வரவில்லை என காப்பீடு நிறுவனங்கள் பதிலளித்து,மருத்துவ செலவை வழங்காமல் தாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், அரசுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியும், இன்னும் மருத்துவ செலவு வரவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE