கொரோனா காரணமாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தேர்வுகளும் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டன.தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, செப்டம்பர் 1 முதல் கல்லுாரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன.
இந்நிலையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், தேர்வு குறித்து அறிக்கை வெளியானதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதில், 'பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.'அதன்படி அடுத்து வரும் செமஸ்டர் தேர்வுகளை, நேரடி முறையில் மட்டுமே நடத்த வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
இது குறித்து, யு.ஜி.சி., தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட விளக்கம்:செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் மட்டும் நடத்த வேண்டும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது. அந்த அறிக்கை போலியாக தயாரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.யு.ஜி.சி.,யை பொறுத்தவரை, அதன் அதிகாரப்பூர்வமான, ugc.ac.in என்ற இணையதளத்தில் மட்டுமே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
எனவே, கல்லுாரி, பல்கலை நிர்வாகத்தினர்,மாணவர்கள் மற்றும் பெற்றோர், யு.ஜி.சி., பெயரில் வரும் போலி அறிக்கைகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE