இந்த கல்வெட்டுகளின் வாயிலாக, தமிழர்களின் வரலாறு,பண்பாடு, நாகரிகத்தை அறிய முடிகிறது.இன்னும் படியெடுக்கப்படாமல், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில், 90 சதவீதத்துக்கு மேலானவை கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
இவற்றை, கல்லில் மாவு தடவி, காகிதத்தில் மை தடவி படியெடுத்து, படித்து பதிப்பிக்கும் நடைமுறை தற்போது புழக்கத்தில் உள்ளது. ஓலைச்சுவடிகளை 'மைக்ரோ பிலிம்'களாக மாற்றும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை செயல்படுத்தும் காலம் அதிகமாகவும், அதிக ஆட்கள் தேவைப்படுவதாகவும் உள்ளது.
இதை குறைக்க, புதிய தொழில்நுட்ப வசதியுடைய ஸ்கேனர்கள் வாயிலாக ஸ்கேன் செய்து, '3டி' தொழில்நுட்பத்தில், வலைதளத்தில் சேமிக்கும் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த, தமிழக தொல்லியல் துறை தயாராகி வருகிறது. விரைவில், புதிய தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் துவங்கும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE