தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், தற்போது ஆளுங்கட்சியான திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்படும்’ என்பது ஆகும்.
‘புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து துறை அரசு ஊழியர்கள் மத்தியிலும் நிலவுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதுவரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் செயல்படுத்தப்படாமல் இருப்பது அவர்களிடையே பெரும் மனக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
“புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வர வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களை திரும்பவும் பழைய பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற பள்ளிக் கல்வி அமைச்சரிடம் கோரி வருகிறோம்.
அதற்கான மனுவை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவிடம் மனு அளித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE